வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்து வருகின்றனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, 24.12.2022-ல் நடைபெறுகிறது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ், “ஹாய் செல்லம்.. லவ் யூ செல்லம்.. சுமார் 14 வருஷத்துக்கு அப்றம் வாரிசு படத்துக்காக முதல் ஷாட் எடுக்குறோம், அப்ப விஜய் என்னிடம் வந்து செல்லம் இந்த கண்ண இவ்ளோ பக்கத்துல பார்த்து எவ்ளோ நாள் ஆச்சுனு கேட்டாரு. அவரோட வளர்ச்சிய பார்க்க சர்ப்ரைஸா இருக்கு.” என குறிப்பிட்டவர், “இந்த படத்துல நான் தான் வில்லன்.. நான் தான் வில்லன்” என சொன்னதுடன், சமீபத்திய சிறந்த பாடல்களாக வாரிசு பாடல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், ரஷ்மிக மிகவும் பீக்கில் இருக்கிறார் என்றும் பேசினார். மேலும் வாரிசு பட தயாரிப்பாளரான தில் ராஜூ, துணிவுள்ள தயாரிப்பாளர் என்றும் பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.