நடிகர் பிரகாஷ் ராஜ் தென்னிந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர்.
ஒரு அன்பான தந்தை, பயங்கர வில்லன், தீவிர அரசியல்வாதி, நம்பகமான நண்பர் என அவர் அனைத்து வகையான குணங்களையும் எளிதாக திரையில் கொண்டு வருபவர்.
கர்நாடகாவைச் சேர்ந்த அரசியல்வாதி & நடிகரான பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாலசந்தரின் டூயட் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பல படங்களில் குறிப்பாக ஆசை, அப்பு, மொழி, கில்லி, வசூல் ராஜா MBBS, காஞ்சிவரம் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். இதில் காஞ்சிவரம் படத்திற்கு தேசிய விருதை வென்றார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் தமிழில் கடைசியாக திருச்சிற்றம்பலம், விருமன் படங்களில் நடித்தார். தெலுங்கில் துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம் திரைப்படத்தில் கடைசியாக திரையில் காணப்பட்டார்.
தற்போது பொன்னியின் செல்வன், கப்ஸா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரகாஷ் ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "இந்த வீடியோவை உருவாக்கியது யாராக இருந்தாலும்.. இன்றைய நாளை சிறப்பாக்கி விட்டது. லவ் யூ செல்லம் " என வீடியோவை பகிர்ந்து கூறியுள்ளார்.
பிரகாஷ் ராஜ் பகிர்ந்த இந்த வீடியோவில் கில்லி முத்துப்பாண்டி & திருச்சிற்றம்பலம் இன்ஸ்பெக்டர் நீலகண்டன் கதாபாத்திரங்கள் இணைக்கப்பட்டு திருச்சிற்றம்பலம் படத்தின் நீலகண்டன் கதாபாத்திரம், கில்லி படத்தின் முத்துப்பாண்டி கதாபாத்திரத்தின் தீமைகள் & தனலெட்சுமி கதாபாத்திரத்தை நினைத்து வருந்துவதாக வீடியோ அமைந்துள்ளது.
கில்லி படத்தில் பிரகாஷ் ராஜ் கதாபாத்திரமான முத்துப்பாண்டி, த்ரிஷா கதாபாத்திரமான தனலெட்சுமியை ஒரு தலையாக காதலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.