'பிக் பாஸ் முடிஞ்சதும் பிரம்மாண்ட சீரியலில்..'- பிரபல சின்னத்திரை ஸ்டார் REVEALS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலுமே கவனம் செலுத்தி வருபவர் நடிகர் பிரஜின். சமீபத்தில் மலையாளத்தில் நிவின் பாலி மற்றும் நயன்தாரா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த ‘லவ் ஆக்ஷன் டிராமா’ திரைப்படத்தில் நடிகர் பிரஜின் வில்லனாக நடித்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

பிரபல இயக்குநர் மற்றும் நடிகரான சீனிவாசனின் மகனும், இயக்குநர் வினீத் சீனிவாசனின் தம்பியுமான தயன் சீனிவாசன், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இவர் ஏற்கனவே சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். நிவின்பாலி, நயன்தாரா, வினித் சீனிவாசன், அஜு வர்கீஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் ஓணம் பண்டிகைக்கு ரிலீசாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் பிரஜின் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

‘ஒரு வடக்கன் செல்ஃபி’ படத்திற்கு பின் மிகவும் ஜாலியான கேரக்டரில் நிவின் பாலி நடித்துள்ளார். மிகவும் எளிமையாக பழகினார். அதேபோல் நயன்தாராவுடன் இந்த படத்தில் 2 காட்சிகளில் இணைந்து நடித்துள்ளேன். ஒரு காட்சியில் அவரை எதிர்த்து பேசுவது போல் வசனம் பேசியிருந்தேன். ஆனால் சில காரணங்களால் அது திரைப்படத்தில் இடம்பெறவில்லை என கூறியிருந்தார்.

மேலும், இந்த படத்தில் வில்லனாக நடித்ததற்கு பலரும் பாராட்டி வரும் நிலையில், குறிப்பாக தனது நடிப்பை பாராட்டி அஜூ வர்க்கீஸ் காஸ்ட்லியான TAGHUER வாட்ச் ஒன்றை பரிசளித்ததாக பிரஜின் தெரிவித்துள்ளார்.

தற்போது நடிகர் பிரஜின் தமிழில் சீனு ராமசாமியின் உதவியாளர் இயக்கியுள்ள ‘குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்னும் இரண்டு மாதங்களில் வெளியாக இருக்கிறது. இது தவிர தற்போது மிகப்பெரிய கம்பெனி ஒன்றில் ஹீரோவாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. லவ் ஆக்ஷன் டிராமவை தொடர்ந்து மலையாளத்திலும் பட வாய்ப்புகள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மறுபுறம், சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் விஜய் டிவியில் மீண்டும் ஒரு பிரம்மாண்டமாக தொடரில் பிரஜின் நடிக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Prajin to act in TV Serial after Bigg Boss show Vijay TV

People looking for online information on Bigg Boss Tamil 3, Love Action Drama, Nayanthara, Nivin Pauly, Prajin will find this news story useful.