இந்திய டூரின் முக்கிய தருணங்கள்.. பாடகி பிரகதி பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகையும் பாடகியுமான பிரகதி, சமீபத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

Advertising
>
Advertising

Asசன்னி லியோன் உடன் G.P. முத்துவும் நடித்த Oh My Ghost.. ரிலீஸ் எப்போ? செம்ம அப்டேட்

பாடகி பிரகதி, 2010 இல் ஜெயா டிவியில் ஒளிபரப்பான ஜூனியர்களுக்கான பாடகர் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றவர். பின்னர் 2012 ஆம் ஆண்டு ஒளிபரப்பான விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்தவர். தமிழ் சினிமாவில் சில படங்களில் பிரகதி பாடியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும்  பிரகதி  அவ்வப்போது போட்டோ ஷூட், அமெரிக்காவில் நடக்கும் நிகழ்வுகள், நண்பர்களுடன் இருக்கும் போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பவர்  பிரகதி.

சில வாரங்களுக்கு முன் இந்தியாவிற்கு வந்த பிரகதி, நடிகை கீர்த்தி பாண்டியனுடன் சேர்ந்து சுற்றுலா சென்றார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், கீர்த்தி பாண்டியன் & பிரகதி அங்குள்ள தெரு உணவான பிரட் ஆம்லேட், ஜூஸ், பிஸ்கட், டீ, இனிப்பு வகைகள் உண்ணும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தனர். மேலும் பிரகதி பிரபல கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தை சந்தித்த புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

முன்னதாக சென்னையில் உள்ள கோயில்களுக்கு சென்று பிரகதி & கீர்த்தி பாண்டியன் சாமி தரிசனம் செய்தனர். நடிகை கீர்த்தி பாண்டியன்,
தும்பா, அன்பிற்கினியாள் படத்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி பாண்டியன் கண்ணகி படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பிரகதி, தனது இந்திய சுற்றுப்பயணத்தின் தருணங்களை புகைப்படங்களாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் பலர் லைக் இட்டு, பகிர்ந்து வருகின்றனர்.

Also Read | "விஜய் கைல தூக்கி வெச்சிகிட்டதே போதும்.." - Fans Meet -ல் வைரல் ஆன ரசிகரின் குடும்பம் நெகிழ்ச்சி.!

Pragathi Guruprasad shared Latest India Trip Photos

People looking for online information on Pragathi Guruprasad, Pragathi Guruprasad Latest Photos will find this news story useful.