LOVE TODAY பார்த்துட்டு சிம்பு அனுப்பிய வாழ்த்து.. நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த பிரதீப்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லவ் டுடே படத்தினை பார்த்த பிறகு நடிகர் சிம்பு இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்து அனுப்பியுள்ளார்.

Advertising
>
Advertising

'கோமாளி' படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார்.  நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4, 2022 ஆம் தேதி முதல் வெளியாகி உள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் சிம்பு அனுப்பிய வாழ்த்து பூங்கொத்தை வீடியோ எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் முதல்முதலாக தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியதற்கு பிரதீப் நன்றி கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Pradeep Tweet about Silambarasan TR wishes for Love Today

People looking for online information on Love today, Pradeep Ranganathan, Silambarasan TR will find this news story useful.