LOVE TODAY : “இவரை மறந்துட்டேன்..” விஜய் பட இயக்குநருக்கு நன்றி சொல்லி ட்வீட் போட்ட பிரதீப்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கோமாளி' படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார் 2’.. South -ல படத்தை ரிலீஸ் பண்ண ஆர்வம் காட்டும் விநியோகஸ்தர்கள்.!

நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4, 2022 ஆம் தேதி முதல் வெளியாகி உள்ளது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தின் திரையரங்குகளில் மூன்றாவது வாரத்தை கடந்த வாரம் எட்டியதை ஒட்டி நடிகர், இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில், "லவ் டுடே இன்னும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் மூன்றாவது வாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், லவ் டுடே திரைப்படத்திற்கும் எனக்கும் அளித்த அபரிமிதமான ஆதரவிற்காக அனைத்து பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

டிவி சேனல்கள், ரேடியோக்கள், யூடியூப் சேனல்கள், செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள், இன்ஃப்லூயன்ஸர்கள் ஆகியோரின் ஆதரவு அளப்பரியது. மீம் கிரியேட்டர்கள், வீடியோ எடிட்டர்கள் என்னை ஆதரித்ததற்காகவும், என்னை ஊக்குவித்ததற்காகவும் என் நன்றியை  தெரிவித்து கொள்கிறேன், அவர்களின் படைப்பாற்றல் எனக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருந்துள்ளது. அபரிதமான அன்புடன் பிரதீப் ரங்கநாதன்" என கூறியிருந்தார். மேலும் சென்னையில் உள்ள பிரபல கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் லவ் டுடே திரைப்படம்,  2022 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களின் வசூலில் முதல் 5 இடத்தில் நுழைந்து சாதனை படைத்துள்ளது என‌ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடந்த வாரம் தெலுங்கிலும் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்ட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், “'LoveToday' டைட்டிலை பயன்படுத்தியதை பொறுத்தவரை, நான் அதை முதலில் உருவாக்கியவருக்கு நன்றி சொல்ல மறந்துவிட்டேன். அது 1997-ல் வெளியான LoveToday பட புகழ் இயக்குநர் பாலசேகரன். நீங்கள் காலத்தை தாண்டிய டைட்டிலை உருவாக்கியுள்ளீர்கள். அந்த டைட்டிலுக்கும், தங்களின் பெருந்தன்மைக்கும் நன்றி சார்.!” என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டியில் நடிகர் இயக்குனர் பிரதீப் கலந்து கொண்டபோது,  “'லவ் டுடே' பட டைட்டில் R.B சௌத்ரி சார்ட்ட ரைட்ஸ் இருந்தது. இருப்பினும் விஜய் சாரிடமும் கேட்கப்பட்டது. ஏ ஜி எஸ் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே பிகில் படம் தயாரித்து இருந்ததால், விஜய் சாரை அணுகுவது எளிதாக இருந்தது. விஜய் சாருக்கு லவ் டுடே படத்துக்கான மூல குறும்படத்தை அனுப்பி, அந்த கதையை தான் லவ் டுடே என எடுக்கப்போவதாக கூறி அனுமதி வாங்கினோம்” என பிரதீப் தெரிவித்திருந்தார்.

Also Read | "தன் பட போஸ்டரை ஒட்டிய ஹீரோயின்.. கேமரா மேனோட எப்படி லவ்னு தெரில".. வாழ்த்திய கஞ்சா கருப்பு...!

தொடர்புடைய இணைப்புகள்

Pradeep ranganathan thanked vijay Love Today 1997 director

People looking for online information on Love today, Love Today 1997, Pradeep Ranganathan, Vijay will find this news story useful.