'LOVE TODAY' படத்தின் மாபெரும் வெற்றி.. நெகிழ்ச்சியான அறிக்கை வெளியிட்டு உருகிய பிரதீப் ரங்கநாதன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'லவ் டுடே' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | 'வாத்தி' படத்தின் 'வா வாத்தி' பாடல்.. தனுஷ் பாட & G.V. பிரகாஷ் வாசிக்க.. அசத்தலான SNEAK PEEK!

'கோமாளி' படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார்.  நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4, 2022 ஆம் தேதி முதல் வெளியாகி உள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தின் வெற்றிக்கு ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், " இது நிஜமாகவே நடந்து கொண்டிருக்கிறதா? நான் கேட்பதும், காண்பதும் நிஜமா? ஒவ்வொரு நாளும் படத்தின் காட்சிகளும், நள்ளிரவு காட்சிகளும், தியேட்டர் ஆக்கிரமிப்பும், அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நேற்று திங்கட்கிழமை ஆனாலும், பல இடங்களில் காலை காட்சிகள் ஹவுஸ்ஃபுல் ஆவதையும், குடும்பங்கள் வருவதையும் ரசிகர்கள் மறுமுறை பார்ப்பதையும் பார்த்தேன். தமிழ்நாட்டிற்கு வெளியிலும் இதே நிலை இருக்கிறது (பெங்களூரு, கேரளா, மலேஷியா etc).

நான் நட்சத்திரம் இல்லை, உங்களில் ஒருவன். நீங்கள் என்மீது காட்டும் அன்பு மிகப்பெரியது. உங்களை நம்பிய என்னை நீங்கள் கைவிடவில்லை. மாறாக, என்னை கை தூக்கிவிட்டீர்கள். நான் சொன்னது போல் நம்பிக்கை கைவிடாது. நன்றி. என்னை நம்பியதற்கு அகோரம் அவர்களுக்கு நன்றி.

நீங்கள் சிரிப்பதையும், கொண்டாடுவதையும், தியேட்டர் கதவுகளின் ஓரத்தில் இருந்து பார்த்து கொண்டுஇருக்கிறேன். அதுவே எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது. உங்களின் முகத்தில் மிளிரும் சந்தோஷமஎனக்கு சந்தோஷம். அதுவே நான் விரும்பியது, தியேட்டர்களில் சத்தமும், மகிழ்ச்சியான முகங்களும். நன்றி.

நீங்கள் என்னை நேசிப்பதையும், என்மீது அக்கறை கொள்வதையும், ஆதரவு அளிப்பதையும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். நான் உங்களை நேசிக்கிறேன் என்பதையும், மேலும் மிகவும் நேசிக்கிறேன் என்பதையும் மட்டும் இப்போது தெரிவித்துக்கொள்கிறேன். அபரித அன்புடன், பிரதீப் ரங்கநாதன்" என கூறியுள்ளார்.

 

Also Read | சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்'.. படத்தில் இணைந்த பிரபல தெலுங்கு வில்லன் நடிகர்!

தொடர்புடைய இணைப்புகள்

Pradeep Ranganathan Statement about Love Today Movie Success

People looking for online information on Love today, Love Today success, Pradeep Ranganathan will find this news story useful.