"உன் போன்ல இவ்ளோ APPS இருக்கு..".. மூச்சுவிடாமல் லிஸ்ட் போட்ட LOVE TODAY பிரதீப்.! புல்லரிக்கும் BTS வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'கோமாளி' படத்தை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தை இயக்கி கதாநாயகனாக நடித்துள்ளார்.  நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார். 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா 'லவ் டுடே' படத்தின் நாயகியாகவும், ராதிகா சரத்குமார், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "லோகேஷ் LCU மாதிரி இதுலயும்".. அடுத்த படம் பத்தி உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த சூப்பர் தகவல்..

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீட்டில் உருவாகி வெளியான இந்த படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த நவம்பர் 4, 2022 ஆம் தேதி முதல் வெளியாகி உள்ளது. இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இன்றைய தலைமுறையினர் எதிர்கொள்ளும் காதல் உறவு சிக்கல்களைப் பற்றி நகைச்சுவை கலந்து டிராமாவாக இப்படம் பேசும். மிகுந்த பொழுதுபோக்கு அம்சங்களோடு பார்வையாளர்களை ‘லவ் டுடே’ கவர்ந்த இப்படத்தை பலரும் பாராட்டியிருந்தனர். இதனிடையே லவ் டுடே 100 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தகவல் தெரிவித்திருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

அந்த வகையில் தற்போதைய 2கே கிட்ஸ் முதல்  பெரியவர்கள் வரை பலரையும் ஃபீல் குட் என நினைக்க வைத்த ரொமாண்டிக் காமெடி ஜானரில் வெளியான இந்த லவ் டுடே திரைப்படம் தற்போது பலருக்கும் ஃபேவ்ரைட் படமானதுடன், அண்மைக்காலங்களில் முதல் பட நடிகர் நடித்த வசூலை குவித்த ஒரு முக்கியமான திரைப்படமாக இப்படம் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் லவ் டுடே படத்துக்காக டப்பிங் பேசும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆன் ஸ்கிரீனில் பார்த்த அதே எனர்ஜியுடன், அதே ஃபீலுடன் தெறியாக டப்பிங் பேசுகிறார் பிரதீப் ரங்கநாதன்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த டப்பிங் வீடியோவில் சமூக வலைதளங்கள், பணப்பரிவர்த்தனை செயலிகள், டேட்டிங் செயலிகள் அனைத்தையும் வரிசைப்படுத்தி, “இதில் ஒரு ஆப்பை திறந்து பார்க்கவே ஒருநாள் தேவைப்படும், இந்த எல்லா ஆப்பும் உன் போனில் இருக்கிறது” என ஆன்ஸ்கிரீனில் நாயகி இவானாவிடம் பேசும் வசனத்தை பேசுகிறார்.

இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Also Read | “எம்மா.. ஏ..”.. வைரல் வீடியோவை தொடர்ந்து அஜித் பட ஹீரோயினுடன் ‘எதிர்நீச்சல்’ மாரிமுத்து!

தொடர்புடைய இணைப்புகள்

Pradeep Ranganathan Dubbing Love Today BTS Video

People looking for online information on BTS, Dubbing, Love today, Pradeep Ranganathan, Video will find this news story useful.