இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் தற்போது பகிர்ந்துள்ள ட்வீட் ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
Also Read | மணிகண்டா Bluetooth ஷூவை பயன்படுத்தினாரா?.. சந்தேகத்தில் பரிசோதித்த பிக் பாஸ்.? மைனா சொன்னது என்ன?
கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ‘கோமாளி'. இப்படத்தை இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி இருந்தார். காஜல் அகர்வால், யோகிபாபு, சம்யுக்தா, கே. எஸ் ரவிக்குமார், பொன்னம்பலம் என பலர் நடித்து இருந்தனர். காமெடி டிராமாவாக உருவான இந்த படத்தை விமர்சகர்களும், ரசிகர்களும் பாராட்டினர். வசூல் ரீதியாகவும் கோமாளி படம் வெற்றியடைந்தது.
கோமாளி படத்தை தொடர்ந்து 'லவ் டுடே' படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி உள்ளார். அவரே இந்த படத்தில் நாயகனாகவும் நடித்துள்ள நிலையில், அவருக்கு ஜோடியாக இவானா நடித்துள்ளார். இவர்களுடன் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்க, தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரிப்பில் லவ் டுடே திரைப்படம் உருவாகி உள்ளது.
கடந்த நவம்பர் 4 ஆம் தேதி வெளியான லவ் டுடே திரைப்படம், மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றதுடன் மட்டுமில்லாமல், தற்போது வரை பல கோடி ரூபாய் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆகவும் மாறி உள்ளது. முன்னதாக குறும்படங்கள் இயக்கியும் நடித்தும் மெல்ல மெல்ல தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் பிரதீப் ரங்கநாதன். தொடர்ந்து, தற்போது கோமாளி மற்றும் லவ் டுடே உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் சிறந்த இளம் இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார்.
இதனிடையே, கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, சில பிரபலங்கள் குறித்து கிண்டலாக பிரதீப் ரங்கநாதன் பேசியதாக ஸ்க்ரீன்ஷாட்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வந்தது. இது பற்றி ரசிகர்கள் கூட அதிகம் கருத்து தெரிவித்து வந்தனர்.
அப்படி ஒரு சூழலில், தனது பெயரில் இணையத்தில் வலம் வரும் பழைய சோஷியல் மீடியா பதிவுகள் குறித்து இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார். அவரது பதிவில், "அதிகம் பரவி வரும் பதிவுகள் Photoshopped செய்யப்பட்டவை. ஒரு வார்த்தையை மாற்றினால் கூட பல விஷயங்கள் மாறும் என்பதால் பேஸ்புக் கணக்கு Deactivate செய்யப்பட்டது. விஷயங்களை மாற்ற முயற்சிப்பவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை. மாறாக மக்கள் என்னை எவ்வளவு ஆதரிக்கிறாரகள் என்பதை காட்டியதற்காக அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்" என ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
தொடர்ந்து அடுத்த பதிவில், "மேலும் அதில் சில பதிவுகள் உண்மையானவை. ஆனால் Cuss Words கொண்டு இருக்கும் பதிவுகள் போலியானவை. நான் தவறு செய்து விட்டேன். வயதுக்கு ஏற்ப நாம் அனைவரும் வளர்ந்து கற்றுக் கொள்கிறோம். நான் அதை சரி செய்ய முயற்சித்தேன். நான் இன்னும் ஒவ்வொரு நாளும் சிறந்த மனிதனாக மாற முயற்சிக்கிறேன்" என பிரதீப் ரங்கநாதன் விளக்கம் கொடுத்து ட்வீட் செய்துள்ளார்.
Also Read | "இதுக்கு கதிரவன் தான் கரெக்ட்டு".. ரகசிய பிளான் போடும் அசீம், ரச்சிதா.. இனி ரகளைகள் தான்!!