இயக்குனர் பிரபுசாலமன் இயக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.
இயக்குனர் பிரபுசாலமன்…
தமிழ் சினிமாவில் 90 களின் இறுதியில் இயக்குனராக அறிமுகமானவர் பிரபு சாலமன். ஆனால் அவர் மீது ரசிகர்களின் கவனம் விழுந்தது மைனா திரைப்படத்துக்குப் பின்னர்தான். அந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் இயக்கிய கும்கி திரைப்படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில்தான் விக்ரம் பிரபு மற்றும் லட்சுமி மேனன் ஆகிய இருவரும் அறிமுகமானார்கள். இதையடுத்து அவர் இயக்கிய கயல், காடன் ஆகிய திரைப்படங்கள் கவனத்தைப் பெற்ற படங்களாக அமைந்தன.
இந்நிலையில் இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் தற்போது குக் வித் கோமாளி புகழ் நடிகர் அஸ்வின் குமார் நடித்துள்ள படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இந்த படத்தை Trident Arts நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, திண்டுக்கல், கொடைக்கானலில் நடந்தது.
90 வயது பாட்டியாக கோவை சரளா…
இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் கோவை சரளா 90 வயது பட்டியாகவும், தம்பி ராமையா பஸ் கண்டக்டராகவும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. இப்படத்தில் முழுக்க முழுக்க பஸ்ஸில் படமாக்கப்பட உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பிரபு சாலமனின் முந்தைய படங்களைப் போலவே இயறகை அழகு சார்ந்த கதையாகவும் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே மைனா படத்தில் பிரபுசாலமன் பஸ் விபத்துக் காட்சி ஒன்றை சிறப்பாக படமாக்கி ரசிகர்களின் பாராட்டுகளைக் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபுசாலமனின் ‘செம்பி’…
இந்த படத்தின் தலைப்பு இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது. படத்துக்கு ‘செம்பி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை சரளாவின் வயதான பாத்திரத்தோடு முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. மேலும் அஸ்வின் ஒரு சிறுமியோடு அமர்ந்திருக்கும் மற்றொரு போஸ்டரும் வெளியாகி இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரை வைத்து பாட்டி- பேரனுக்கு இடையிலான உணர்வுப் பூர்வமான கதையாக இருக்கலாம் என தோன்றுகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8