மலையாளத்தில் நடிகர் பிரித்வி ராஜ் இயக்கத்தில் வெளியான அரசியல் த்ரில்லர் படம் 'லூசிஃபர்'.
Also Read | என்னா ஸ்டெப்பு இது.. ஜோனிதா - அனிருத் காம்போ அள்ளுதே! தீயாய் பரவும் PRIVATE PARTY மேக்கிங் வீடியோ
இந்த படத்தில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் கதாநாயகனாக நடித்து இருந்தார். மேலும், மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ் ஆகியோரும் இப்படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தின் இயக்குனரான பிரித்வி ராஜ் கெஸ்ட் ரோலில் தோன்றி இருந்தார்.
இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார். தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்னும் பெயரில் தயாராகி வரும் இப்படத்தை முதலில் சாஹு படத்தின் இயக்குனரான சுஜித் இயக்குவதாக இருந்தது. அதன்பிறகு வேலைக்காரன், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மோகன் ராஜா இப்படத்தினை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு வெளியான வேலைக்காரன் படத்திற்கு பிறகு மோகன் ராஜா இந்தப் படத்தை இயக்குவதால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிளம்பியுள்ளது.
காட்ஃபாதர் படத்தில் பிரித்வி ராஜ் கேரக்டரில் பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் நடித்துள்ளார். விரைவில் சிரஞ்சீவி மற்றும் சல்மான் கான் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளனர். இந்த சிறப்பு நடனத்திற்கு பிரபுதேவா நடனம் அமைக்கிறார், எஸ் தமன் இசையமைக்கிறார். இதைத் தமன் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
மோகன் ராஜா, பிரபுதேவா மற்றும் இசையமைப்பாளர் ஆகியோருடன் சிரஞ்சீவி இருப்பதை தமன் பகிர்ந்துள்ளார். விரைவில் இந்தப் பாடலை படமாக்கவுள்ளனர் படக்குழுவினர்.
காட்ஃபாதர் படம் படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தில் உள்ளது. நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கிறார், பூரி ஜெகநாத் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சத்யா தேவும் முழு நீள கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சிறந்த தொழில்நுட்பக் குழுவினர் இப்படத்தின் பல்வேறு கைவினைகளை கையாள்கின்றனர். மாஸ்டர் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா கேமராவைக் கையாளுகிறார், அதே நேரத்தில் இசை அமைப்பாளர் எஸ்எஸ் தமன் இசைப்பதிவுகளை வழங்குகிறார். பல பாலிவுட் ப்ளாக்பஸ்டர் படங்களின் கலை இயக்குநரான சுரேஷ் செல்வராஜன் இந்தப் படத்தின் கலைப் பணிகளை கவனித்து வருகிறார்.
இப்படத்தை ஆர்பி சவுத்ரி மற்றும் என்வி பிரசாத் இணைந்து தயாரித்துள்ளனர், கொனிடேலா சுரேகா இதனை வழங்குகிறார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8