பிரபு தேவா - சம்யுக்தா ஹெக்டே நடிக்கும் 'தேள்' படத்தின் சரவெடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபுதேவா நடிக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ திரைப்படம் நாளை (19-11-2021) டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

Advertising
>
Advertising

அடுத்து பிரபு தேவா நடித்து 'யங் மங் சங்', 'ஊமை விழிகள்', 'பஹீரா' உள்ளிட்ட படங்கள் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன. இச்சமயத்தில் “தேள்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. STUDIO GREEN   நிறுவனம் சார்பில் K.E. ஞானவேல் ராஜா  “தேள்” திரைப்படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தில் பிரபுதேவா, ஈஸ்வரி ராவ்  இருவரும் அம்மா,  மகனாக  நடித்துள்ளனர். C.சத்யா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இயக்குனரும்,  நடிகருமான ஹரிக்குமார்  தேள் படத்தை இயக்கியுள்ளார். பிரபுதேவா ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். இந்தப்படத்தில் பிரபுதேவாவுக்கு நடன காட்சியே இல்லை என்பது சுவாரஸ்யமானது.

இந்த படம் கடந்த 2019ஆம் ஆண்டே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. தற்சமயம் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை ஒரு பிரத்யேக போஸ்டருடன் படக்குழு சார்பாக அறிவித்துள்ளனர்.

அதில் இப்படம் வரும் டிசம்பர் 10 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

தொடர்புடைய இணைப்புகள்

Prabhu Deva Theal Releasing in Theatres from 10th December

People looking for online information on Prabhu Deva, Samyuktha Hegde, Theal, ThealFromDec10 will find this news story useful.