ஆர்யா வெளியிட்ட பிரபுதேவாவின் அடுத்த பட டைட்டில் லுக்! 90S KIDSக்கு பரீச்சயமான பேரா இருக்கே?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரேக்ளா: பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகும் நடிகர் பிரபுதேவாவின் புதிய படமான 'ரேக்ளா' திரைப்படத்தின் டைட்டில் லுக் தற்போது வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

பிரபுதேவா

நடிகர் நடன இயக்குநராக வலம் வந்தவர். முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் ஹிட் பாடல்கள் பலவற்றுக்கு இன்றும் கோரியோகிராஃப் பண்ணுவதுடன் இயக்குநராகவும், கமர்ஷியல் நடிகராகவும் சக்கை போடு போடு வருகிறார் நடிகர் பிரபுதேவா.

Also Read: “நான் Dating-ல இல்ல.. குங்குமம் Shoot-க்காக.. Pregnant-ஆ?”.. Serial-ஐ விட்டு விலகினக்கு இதெல்லாம் காரணமா?.. கடுப்பான நடிகை!

அண்மை திரைப்படம்

அண்மையில் பிரபுதேவா நடித்து வெளியாவதற்காக எதிர்பார்க்கப் பட்டிருந்த பொன் மாணிக்கவேல் திரைப்படமான டிஸ்னி+ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியானது. இந்த நிலையில் நடிகர் பிரபுதேவா நடிப்பில் தயாராகும் 'ரேக்ளா' படத்தின் டைட்டில் லுக்கை நடிகர் ஆர்யா வெளியிட்டார்.

பிரபுதேவா நடிக்கும் ரேக்ளா

ஒலிம்பியா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அம்பேத் குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கவிருக்கும் இந்த புதிய படத்திற்கு 'ரேக்ளா' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் டைட்டில் லுக்கை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகர் ஆர்யா வெளியிட்ட டைட்டில் லுக்

'வால்டர்' படத்தை இயக்கிய இயக்குநர் அன்பு. இவரது இயக்கத்தில் தயாராகவிருக்கும் புதிய படம் தான் 'ரேக்ளா'. இதில் கதையின் நாயகனாக நடிகர் பிரபுதேவா நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் டைட்டில் லுக்கை இன்று நடிகர் ஆர்யா வெளியிட்டார். அத்துடன் இந்த திரைப்படத்தில் பணியாற்றும் முதன்மை கதாபாத்திரஙள், இதர நடிகர்கள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபுதேவாவின் 58வது படம்

நடிகர் பிரபுதேவாவின் நடிப்பில் 58-வது படமாக உருவாகும் இந்த 'ரேக்ளா' எனும் திரைப்படத்தின் டைட்டில் லுக், இணையவாசிகளிடமும், ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

90-களில் வந்த பல திரைப்படங்களில் ரேக்ளா ரேஸ் என்பது பல ஹீரோக்களின் திரைப்படங்களில் முக்கிய நிகழ்வாக இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஷியாம் சிங்கா ராய்.. அடேயப்பா! உலக லெவல்ல இந்த Cataegory-ல 3வது இடம்.. கெத்து காட்டுதே!

தொடர்புடைய இணைப்புகள்

Prabhu Deva 58h movie Rekla firstlook arya releases

People looking for online information on Prabhu Deva, Rekla will find this news story useful.