பிரபாஸ் - தீபிகா படுகோனே நடிக்கும் PAN INDIA படம்.. இந்திய சினிமாலயே முதல் முறையா இதை பண்றாங்களாம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐதராபாத்: பாகுபலி பிரபாஸ் - தீபிகா படுகோனே நடிக்கும் புதிய PAN INDIA படத்தின் ஷூட்டிங் தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

தெலுங்கு நடிகர் பிரபாஸ் ‘பாகுபலி’ சீரிஸ் படங்களின் வெற்றிக்கு பிறகு பரந்த ரசிகர் பட்டாளத்தை பெற்றார். இவரின் அடுத்த படமான 'சாஹோ' விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அதனால் பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் அறிவுரைப்படி காதலை மையமாக வைத்து 350 கோடி ரூபாய் செலவில் ராதா கிருஷ்ணா குமார் இயக்கத்தில் 'ராதே ஷியாம்' படத்தில் நடித்தார். இந்த படம் 1970களில் ஐரோப்பாவில் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டு, இந்த 2022 மார்ச் 11ல் ராதே ஷ்யாம் ரிலீசானது.

பிரபாஸ் தற்போது நான்கு பெரிய படங்களை அறிவித்த பிறகு பிரபாஸ் ரசிகர்களிடம்  பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. தீபிகா படுகோனின் தெலுங்கு அறிமுகமபடமான, தற்காலிகமாக பிரபாஸ் 21 என பெயரிடப்பட்டுள்ள ப்ரொஜெக்ட் கே  படம், ஆடிபுருஷ் மற்றும் கேஜிஎஃப் இயக்குனருடன் இணையும் சலார், சந்திப் ரெட்டி வாங்காவுடன் ஸ்பிரிட்  படம் என வரிசையாக படங்களை வைத்துள்ளார்.

PROJECT K

தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கும் Project K படத்தின் முதல் கட்ட ஷீட்டிங் ஐதராபாத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் துவங்கியது. இதில் நடிகை தீபிகா படுகோன், பிரபாஸ் கலந்து கொண்டனர். வைஜெயந்தி மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார். மேலும், மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் தீபிகா படுகோனே சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகின்றன. 

ARRI

இந்த படத்தில் உலகின் மிகப்பெரிய கேமராவான ARRI RENTAL ALEXA 65 பயன்படுத்தப்படுகிறது என படக்குழு அறிவித்துள்ளது. இந்த வகை கேமராவில் தான் உலகப்புகழ் பெற்ற Cats (2019), Joker (2019) ...Solo: A Star Wars Story (2018) ...If Beale Street Could Talk (2018) ...Bohemian Rhapsody (2018) ...Live by Night (2016) ...War for the Planet of the Apes (2017) போன்ற படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 

மேலும், இந்தியாவில் முதல்முறையாக DIY ARRI ALEXA கேம்ரா தொழில் நுட்பத்தில் இந்த படம் எடுக்கப்படுகிறது. DIY Arri Alexa தொழில்நுட்பம் ஒளிப்பதிவுடன் தொடர்புடையது, இது படத்தின் காட்சி அனுபவத்தை மேம்படுத்தும் தன்மை உடையது.

தொடர்புடைய இணைப்புகள்

Prabhas Project K India's 1st DIY Arri Alexa technology film

People looking for online information on ARRI, Deepika Padukone, DIY Arri Alexa, Prabhas, Project K will find this news story useful.