நாம யோசிக்கிறோம்னு நம்ம மனசு ஏமாத்துதது! ராதே ஷ்யாம் படத்தின் மிரட்டலான கிளிம்ப்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபாஸ் மற்றும் பூஹா ஹெக்டே நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் மார்ச் 11 ஆம் தேதி ரிலிஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகுபலிக்கு பின்னர் பிரபாஸின் இந்தியா முழுவதும் பல மொழிகளில் வெளியாகி பேன் இந்தியா படமாக வெளியாகி கவனத்தை ஈர்த்து வருகின்றன. இந்நிலையில் அவர் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள ராதே ஷ்யாம் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising


கைரேகை நிபுணர் ஆதித்யா


ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் ஜெகபதி பாபு மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் உலகின் தலைசிறந்த கைரேகை நிபுணராக பிரபாஸ் நடித்துள்ளார். அவரின் காதலியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். பாகுபலி, சாஹோ போல ஆக்ஷன் படமாக இல்லாமல் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது இந்த படம்.
ஏற்கனவே ஜனவரி 14 ஆம் தேதி இந்தியா முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாவதாக திட்டமிடப்பட்டு இருந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை கட்டுப்பாடுகள் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து மார்ச் 11 ஆம் தேதி வெளியாகிறது. தமிழில் இந்த படத்தின் விநியோக உரிமையை முன்னணி தயாரிப்பு நிறுவனமான உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


பிரபாஸுக்கான எதிர்பார்ப்பு:
ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள், போஸ்டர்கள் மற்றும் டிரைலர் வெளியாகியுள்ள நிலையில் மீண்டும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இப்போது இரண்டாவது டிரைலர் ஒன்று வெளியாகியுள்ளது. சற்று முன்னர் வெளியான இந்த டிரைலர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
உலகின் நம்பர் 1 கைரேகை நிபுணராக இருக்கும் பிரபாஸின் சாகசங்களும், பூஜா ஹெக்டேவுடனான பிரம்மாண்டமான காதல் காட்சிகளையும் உள்ளடக்கிய டிரைலர் இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் ரிலிஸுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் இப்போது வெளியாகி இருக்கும் டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகமாக்கியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Prabhas and pooja hedge Radhe shyam new glimpse video released

People looking for online information on Pooha hegde, Prabhas, Radhe Shyam, Sathyaraj will find this news story useful.