வலியில் கலங்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன்!.. மருத்துவமனையில் இருந்து வெளியான வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் பவர் ஸ்டார். இவருடைய உண்மையான பெயர் சீனிவாசன் என்றாலும் கூட திரைப்படங்களில் நடிப்பதற்கான அடைமொழியாக பவர் ஸ்டார் என்று அறியப்படுகிறார்.

Advertising
>
Advertising

லத்திகா, ஆனந்த தொல்லை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த பவர் ஸ்டார், அதனைத் தொடர்ந்து, சந்தானம் நடித்த ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா’ திரைப்படத்தில் சந்தானம் மற்றும் மறைந்த டாக்டர் சேதுராமன் ஆகியோருடன் இணைந்து முக்கியமான காமெடி வேடத்தில் நடித்திருப்பார். 

இதேபோல் மறைந்த இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கிய விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்த கவண் திரைப்படத்தில் பவர் ஸ்டார், பவர் ஸ்டாராகவே சிறப்பு கவுரவ தோற்றத்தில் நடித்து இருப்பார். இந்த கேரக்டர், பவர் ஸ்டார் நடித்தவற்றிலேயே வழக்கத்தைவிட மிகவும் யதார்த்தமாகவும் உண்மையாகவும் இருக்குமாறு காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த நிலையில் நடிகர் பவர் ஸ்டார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று, உடல் நலம் தேறி வரக்கூடிய வீடியோ வெளியாகி இருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர் பூரண நலம் பெற்று முழுமையாக குணமடைந்து திரும்பி வர வேண்டுமென்றும் நேர்மறை வார்த்தைகள் கூறி வருகின்றனர்.

வலியில் கலங்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன்!.. மருத்துவமனையில் இருந்து வெளியான வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Power Star Srinivasan cries in pain hospital treatment video

People looking for online information on Power Star, Power star Srinivasan will find this news story useful.