அருண் விஜய் - ஹரி இணையும் 'யானை' படத்தின் மிரட்டலான டீசர்! எப்போ ரிலீஸ்? வெளியான தீ MASS அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது மாமாவான இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் முதல் முறையாக இணையும் படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

Advertising
>
Advertising

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சமுத்திரக்கனி, யோகி பாபு, ராதிகா சரத்குமார்,புகழ், அம்மு அபிராமி மற்றும் 'கேஜிஎஃப்' புகழ் கருடா ராம் ஆகியோர் நடிக்கின்றனர். டிரம் ஸ்டிக் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இது அருண் விஜய் நடிக்கும் 33வது படமாகும். இந்த படத்திற்கு யானை என்று பெயரிடப்பட்டுள்ளது.

 இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் செப்டம்பர் 9ஆம் தேதி விநாயகர் சதூர்த்திக்கு வெளியானது. போஸ்டர்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றன.இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளன. இந்த படத்தின்  ஆரம்ப படப்பிடிப்பு ராமேஸ்வரம், காரைக்குடி, பழனி, சென்னை பகுதிகளில் நடந்தது. இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ராஜபாளையம் பகுதிகளில் நடைபெற்று வந்தது.  இப்படத்தின்  இறுதிக் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யானை படத்தின் டீசர் வரும் டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனை பிரத்யேக போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது. போஸ்டரில் அருண் விஜய் வாயில் சிகரெட்டுடன் காரின் முன் சண்டைக்காட்சிக்கு தயாரவது போல் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Power packed Teaser of Yaanai to arrive on Dec 23

People looking for online information on Arun Vijay, அருண் விஜய், யானை, யானை டீசர், ஹரி, Hari, Yaanai, Yaanai teaser will find this news story useful.