ஹீரோயின் டிரெஸ்ஸ துவைக்கும் ஹீரோ... ஃபோட்டோவை அவர் மனைவிக்கே அனுப்பிய அசிஸ்டண்ட்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் கடந்த மே மாதம் 27ஆம் ஆஹா ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான படம் போத்தனூர் தபால் நிலையம்.  பேஸன் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்த இந்த படத்தில் பிரவீன், அஞ்சலி ராவ், வெங்கட் சுந்தர் ஆகிய நடிகர்கள் நடித்தனர். கோயம்புத்தூர் ரயில் நிலையங்களில் ஒன்றான போத்தனூர்.

Advertising
>
Advertising

Also Read | அஜித் நடிக்கும் AK61.. இணையத்தை கலக்கும் BTS போட்டோ! யாரெல்லாம் இருக்கானு பாருங்க

இங்கிருக்கும் போத்தனூர் தபால் நிலையத்தில் 1990-களில் பணம் கொள்ளை போகும் ஒரு சம்பவத்தை மையமாக வைத்து இயக்குநர் பிரவீன் இந்த படத்தை இயக்கி இருக்கி நடித்திருக்கிறார், கதைப்படி ஹீரோவின் அப்பா போஸ்ட் மாஸ்டர். பொறுப்புமிக்க அவர், போஸ்ட் ஆபீஸில் இருந்து அதிக பணத்தை 2 நாள் பாதுகாப்பாக வைப்பதற்காக வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்.

ஆனால் வழியில் அந்த பணத்தை யாரோ அடித்து விடுகிறார்கள். இரண்டு விடுமுறை நாளில் நடக்கும் இந்த கதையில் போஸ்ட் மாஸ்டரின் மகனாக இயக்குநர் பிரவீன் நடித்துள்ளார். தனது காதலி அஞ்சலி ராவ், நண்பன் வெங்கட் சுந்தர் ஆகியோருடன் சேர்ந்து திருடப்பட்ட இந்த போஸ்ட் ஆபீஸின் பணத்தைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பது தான் மீதிக்கதை.

இந்நிலையில் இவர் இப்படத்தின் கதாநாயகியின் ஆடைகளை இவரே துவைத்ததாக பதிவிட்டிருக்கிறார். ஆம், போத்தனூர் தபால் நிலையம் திரைப்படத்தில் நடித்த அனைத்து முக்கிய கதாபாத்திரங்களின் ஆடைகளையும் வாஷிங் மெஷினை பயன்படுத்தாமல் தானே துவைத்ததாக பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “எங்களிடம் ஒரே ஒரு செட் ஆடைகளே இருந்தன. சில வருடங்களுக்கு அவற்றைதான் மெயின்டெய்ன் செய்ய வேண்டிய சூழல். எனவே கதாநாயகியின் ஆடையை நான் துவைத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது உதவி இயக்குனர்தான் இதை புகைப்படமாக எடுத்ததுடன், அதை மனைவிக்கும் அனுப்பிவிட்டார். அதுக்கு அப்புறம் என்ன நடந்திருக்கும் என நீங்களே யூகியுங்கள்..” என விளையாட்டாக பதிவிட்டுள்ளார்.

Also Read | ‘சுப்ரமணியபுரம்’ 14 வருஷம்.. ஜேம்ஸ் வசந்தன் நன்றி!!.. கூடவே வைரலாகும் பாடல் பின்னணி.!

தொடர்புடைய இணைப்புகள்

Pothanur thabal nilayam hero washing heroine dress

People looking for online information on Aha, Aha Tamil, OTT movies, Pothanur Thabal Nilayam will find this news story useful.