அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆபாச நடிகை டகோடா ஸ்கை. இவர் தற்போது மரணமடைந்து இருப்பதும் அந்த மரணம் ஒரு மர்மமான மரணமாக இருப்பதும் உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர்தான் தம்முடைய வீட்டில் தற்போது சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் வெளியானது முதலே உலகம் முழுவதும் இருக்கிற திரைத்துறையினருக்கு மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
27 வயதே ஆன டகோடா ஸ்கை தம்முடைய வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவருடைய பிரேதத்தை கைப்பற்றி அவர் இறந்தது குறித்து விசாரணை நடத்த தொடங்கி இருக்கின்றனர்.
இதனிடையே டகோடா ஸ்கை மது மற்றும் போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையானவர் என்று தகவல்கள் வெளியானது. அதுமட்டுமின்றி அவரது தாத்தாவும், பாட்டியும் கொரோனா பாதிப்பால் இறந்ததன் காரணமாக, அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த வருடம் மே மாதம் அமெரிக்க போலீசாரால் கொல்லப்பட்ட கருப்பினத்தவர் ஜார்ஜ் ஃப்ளாய்டு ஓவியத்தின் முன்னால் நின்று அரை நிர்வாண புகைப்படம் எடுத்து பரபரப்பை ஏற்படுத்தியதற்காக டகோடா ஸ்கை விமர்சிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.