அட.. 'வள்ளி திருமணம்' புதிய சீரியலின் நாயகி இவங்களா?.. வெளியான வேற மாரி ப்ரோமோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கலர்ஸ் தமிழின் புதிய தொடரான 'வள்ளி திருமணம்' வரும் ஜனவரி 3  முதல் ஒளிபரப்பைத் தொடங்குகிறது. இதில் தொலைக்காட்சி பிரபலமான நடிகை நட்சத்திரா முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகிறார்.

Advertising
>
Advertising

சென்னை, 29 நவம்பர் 2021:  கலர்ஸ் தமிழ், அதன் புதிய நெடுந்தொடர் நிகழ்ச்சியான வள்ளி திருமணம் தொடரை ஜனவரி 3, இரவு 8.00 மணிக்கு அதன் முதல் ஒளிபரப்பு தொடங்குவதை அறிவித்திருக்கிறது.  இதன் முக்கிய கதாபாத்திரமான வள்ளியின் வாழ்க்கை நிகழ்வுகளோடு, இந்த நிகழ்ச்சியின் மீதான ஒரு முன்னோட்டப் பார்வையினை ஞாயிறன்று வெளியிடப்பட்ட புரோமோ நேர்த்தியாக வழங்கியது.

பாரம்பரிய கலை வடிவமான பொம்மலாட்டத்தின் மூலம் சித்தரிக்கப்பட்ட இந்த நெடுந்தொடரின் முதல் புரோமோ அழகும், அதே நேரத்தில் அறிவும் நிறைந்த  தேனி மாவட்டத்து சாயலில் அசல் கிராமத்துப் பெண்ணான வள்ளியின் கதாபாத்திரத்தின் பல்வேறு பண்பியல்புகளை எடுத்துக்காட்டியது.

வள்ளியின் அறிமுகம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகி வருகின்ற நிலையில், வள்ளியாக நடிகை நட்சத்திரா இடம்பெறுகிறார் என்கிற ஆர்வமூட்டும் ஒரு திருப்பத்தையும் இந்த புரோமோ முன்வைக்கிறது. நடிகை நட்சத்திரா ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியலில் நாயகியாக நடித்ததன் மூலம் அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர். 

அத்துடன், இனி நிகழப்போவது என்னவென்று அறிய பார்வையாளர்களின் வியப்பையும், கற்பனையையும் தூண்டிவிடுகிறது. வள்ளித்திருமணம் நெடுந்தொடரை ஜனவரி 2 ஆம் தேதி முதல் VOOT ஆப்பிலும் பார்வையாளர்கள் பிரத்தியேகமாக கண்டு ரசிக்க முடியும்.

Popular zee tamil actress now in colors tamil valli thirumanam

People looking for online information on Colors Tamil, New Serial, Tv Serial, Valli Thirumanam, Valli Vera Maari, ValliThirumanam, Yaradi Nee Mohini will find this news story useful.