பக்கா கிராமத்து பெண்ணாக மாறிய விஜய் டிவி பிரபலம்... இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பயணத்தைத் தொடங்கியவர் ரம்யா. எத்தனையோ பெண் தொகுப்பாளனிகள் வந்தாலும் ஒரு சில பெண் தொகுப்பாளினிகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். டிடிக்கு பின்னர் விஜய் பிடித்து பிரபலமானது ரம்யா தான். தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தில் கூட பேராசிரியராக நடித்திருந்தார். மேலும் தற்போது சமுத்ரகனியுடன் இணைந்து சங்க தலைவன் என்ற படத்தில் பக்கா கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி,ஆடை போன்ற பல
படங்களில் நடித்திருந்தாலும் தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

popular vijay tvi artist in village attire கிராமத்து பெண்ணாக விஜய் டிவி பிரபலம்

இந்நிலையில் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வெளியிட, உதய் புரோடக்சன்ஸ் தயாரிப்பில் மணிமாறன் இயக்கியுள்ள சங்க தலைவன் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இரா.பாரதிநாதன் எழுதிய ‘தறியுடன்’ என்னும் தறி நெசவாளர்கள் பற்றிய நாவலை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் ‘சங்கத்தலைவன்’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கருணாஸ், ‘விஜே’ ரம்யா, ‘அறம்’ சுனுலட்சுமி, மாரிமுத்து, எம்.ஜி.ஆரின் பேரனான ராமச்சந்திரன் என்கிற ஜூனியர் எம்.ஜி.ஆர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் அந்த படத்தில் பால்காரி போலவேடமிட்டுள்ளார் அவர். இந்த புகைப்படங்களை ரம்யா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Tags : Ramya

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular vijay tvi artist in village attire கிராமத்து பெண்ணாக விஜய் டிவி பிரபலம்

People looking for online information on Ramya will find this news story useful.