பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் யாருமே எதிர்பார்க்காத வகையில் இரண்டு பேர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினர். மேலும் அனிதா, பாலா மற்றும் ஆரி அடிக்கடி பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இருக்கிறது, சிலருக்கு மட்டும் சிலர் சாதகமாக நடந்து கொள்கிறார்கள் என்பது போல குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். இந்த சீசனில் இதுபோன்ற வார்த்தைகள் அதிகம் புழங்குகின்றன. பின்பு நடிகர் கமல்ஹாசனும் இதையே வழிமொழிந்தார். இதனிடையே கடந்த வாரம் அர்ச்சனா மற்றும் ரியோவிற்கு சில அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது பிரபல விஜய் டிவி விஜே-வான பாவனா ஒரு பதிவிட்டுள்ளார். இவர் சம்யுக்தாவின் நெருங்கிய தோழி என்பது குறிப்பிடத்தக்கது. சம்யுக்தா நாமினேட் செய்யப்பட்ட பொது கூட அவருக்காக வோட்டு கேட்டு பதிவிட்டிருந்தார். அவர் அந்த பதிவில் கூறும்போது "பிக்பாஸில் இது ரொம்ப நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. Favourism என்ற ஒரு வார்த்தையே கிடையாது அது Favouri-it-sm. நமது குழந்தைகள் அதைப் பார்த்து தவறான ஆங்கிலத்தை கற்றுக் கொள்ளக் கூடாது. முடியலடா சாமி. #Biggboss4tamil" என்று கூறியுள்ளார்.