பிக்பாஸ் வீட்டுக்கு விஜய் டிவி பிரபலம் சர்ப்ரைஸ் எண்ட்ரி!.. பார்த்த நொடியே அழுத பிரியங்கா.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5-வது சீசன் முன்பை விடவும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

popular vijay tv persin enters Biggboss house Priyanka cries
Advertising
>
Advertising

இந்த நிகழ்ச்சியில் தற்போது தீபாவளி கொண்டாட்டத்துக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதன்படி பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் புத்தாடைகள் அணிந்து கலக்கலாக தீபாவளியை கொண்டாடுவதற்கு தயாராகினர். அப்போது அந்த பிக்பாஸ் வீட்டுக்குள் பாடகர்கள், காமெடியன்கள் என்று ஒவ்வொருவராக வருகை தந்ததுடன், ஒரு தங்களுக்கு என்று பொருத்தப்பட்ட கண்ணாடி அறைக்குள் நின்றபடி பிக்பாஸ் போட்டியாளர்களை பார்த்துப் பேசத் தொடங்கினர்.

popular vijay tv persin enters Biggboss house Priyanka cries

அந்த வகையில் பிரபல விஜய் டிவி விஜே மா.கா.பா ஆனந்த் அந்த கண்ணாடி அறைக்குள் திடீரென என்ட்ரி கொடுத்தார். அவரைப் பார்த்த பிரியங்கா ஓடிவந்து, கண்ணாடி அறைக்குள் நின்று கொண்டிருந்த,  மா.கா.பாவின் கைக்கு நேரே, கண்ணாடியில் கைவைத்து அழத்தொடங்கினார். அன்பை வெளிப்படுத்தினார். நிச்சயம் பிரியங்கா மா.கா.பாவை மிஸ் பண்ணுகிறார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

ஏனென்றால் விஜய் டிவியின் எல்லா நிகழ்ச்சிகளிலும், பெரும்பாலும் பிரியங்கா மற்றும் மா.கா.பா இணைந்து, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவார்கள். அந்தப் பிணைப்பு நிச்சயமாக அவர்கள் ஒருவரை ஒருவர் மிஸ் பண்ணக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கும். இந்த நிலையில் பிரியங்கா, மா.கா.பாவை பார்த்தவுடன் கண்களில் கண்ணீர் விட்டு கலங்கத்தொடங்கினார். பின்னர் பிக்பாஸ் வீட்டுக்குள் அளவாக தான் சாப்பாடு கொடுக்கிறார்கள் என்று மா.கா.பாவிடம் பிரியங்கா புகார் அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் சில விஷயங்களை பேசி எண்டர்டெயின் பண்ணிவிட்டு தன்னுடைய குழுவினருடன் சென்று விட்டார் மா.கா.பா. ஆனந்த். அதன்பின்னர் பிக்பாஸ் போட்டியாளர்கள் பாராஷூட் பட்டாசுகளை தீபம் போல் ஏற்ற அது பிக்பாஸ் வீட்டுக்கு மேலே சென்று வெடிக்க, ஒவ்வொருவரும் தீபாவளி வாழ்த்துக்களை தங்களுக்கு உரித்தானவர்களுக்கு கூறினர்.

தொடர்புடைய இணைப்புகள்

Popular vijay tv persin enters Biggboss house Priyanka cries

People looking for online information on BB5, Biggboss, Biggbosstamil, BiggBossTamil5, Trending, VijayTelevision, Vijaytv will find this news story useful.