ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்திப் படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றதுடன் 3 தேசிய விருதுகளையும் வென்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை கடும் போட்டிக்கு இடையே தியாகராஜன் கைப்பற்றினார். பொன்மகள் வந்தாள்' படத்தின் மூலம் அனைவருடைய பாராட்டையும் பெற்ற இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்க இருந்தார். இதில் நாயகனாக பிரசாந்த் நடிக்கவுள்ளார். இதற்காக உடல் எடையை குறைத்து தயாராகி வந்தார்.
முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. 'அந்தாதூன்' படத்தில் தபுவின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது. தமிழ் ரீமேக்கில் அந்தக் கதாபாத்திரத்தில் தனது நடிப்பு, நடனம் என அனைத்து வகையிலும் ஆட்கொண்ட சிம்ரன், நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், கண்டிப்பாக இவருடைய நடிப்பு அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த படத்தின் ஷுட்டிங் சமீபத்தில் துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் பிரசாந்துக்கு ஜோடியாக பிரபல இளம் நடிகையான பிரியா ஆனந்த் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தில் மாஸ்டர் படத்தில் தளபதி விஜயுடன் நடித்த புகழ் பெற்ற சூப்பர் சிங்கர் பூவையார் இணைந்துள்ளார். இதனை படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.