சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ரியல் ஜோடிகளில் ஒருவர், ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். இந்த ஜோடிக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரில் சந்தித்த இவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். நடிகர் சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'காற்றின் மொழி' சீரியலில் நடித்து வருகிறார்.
தற்போது சமூக வலைதளங்களில் சூப்பர் ஆக்டிவாக இருக்கும் இந்த தம்பதியினர், அடுத்த நடனமாடும் வீடியோ காட்சி ஒன்றை பதிவிட்டுள்ளனர். அதற்க்கு அவர்கள் இட்ட தலைப்பு தான் வைராலகியுள்ளது. "நீண்ட நாட்களுக்கு பிறகு விஜய் டிவியில் கமல் சாருக்கு மரியாதை செய்யும் விதத்தில் இந்த நடனம். விரைவில் வருகிறது! DONT MISS IT" என்று கூறியுள்ளனர். எனவே பலரும் இது பிக் பாஸ் 4-ன் அறிமுக நிகழ்ச்சியா?அல்லது விஜய் டிவியில் ஒளிபரப்பப் போகும் வேறு ஏதாவது நிகழ்ச்சிக்காக நாம் காத்திருக்க வேண்டுமா என்று சந்தேகிக்கின்றனர்! பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.