விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு அறிமுகமே தேவையில்லை. 2006-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வேற லெவல் வரவேற்பு பெற்றதையடுத்து அடுத்தடுத்த சீசன்களாக தற்போது 8-வது சீசன் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி பிரம்மாண்டமாக துவங்கியது. தமிழகத்திலிருந்து சிறந்த திறமையானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறது இந்த நிகழ்ச்சியில். அந்த வகையில் இதுவரை இல்லாத அளவில் ஒன்பது மணி நேர தொடர் ஒளிபரப்பாக இந்த நிகழ்ச்சியின் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்த எட்டாவது சீசன் போட்டியாளர்களை பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி முதல் எபிசோடிலேயே சிறப்பாக பாடி கவனத்தைப் பெற்றவர் அபிலாஷ். இவர் கர்நாடக இசை பயின்றவர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது வருங்கால மனைவியை இவர் சமீபத்தில் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் தாங்கள் சீக்கிரமே திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் சூப்பர் சிங்கர் புகழ் அபிலாஷிற்க்கு தற்போது திருமணம் முடிந்துள்ளது.அவர்கள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.