"ஆரி ஒரு அறுவைனு பாடினவங்க எல்லாம்"... விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு... செம வைரல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். அதுவும் இதுவரை இல்லாத அளவிற்கு 16 கோடி வாக்குகளை பெற்று அவர் முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் மற்ற போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டாலும், சாதுரியமாக தனது விளையாட்டில் களம் இறங்கினார் ஆரி. அதிலிருந்தே அவருக்கு ரசிகர்கள் குவிய தொடங்கினர். ஒருகட்டத்தில் ஆரி தான் டைட்டில் வெல்ல வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் ஒருசேர வாக்களித்ததை பார்க்க முடிந்தது.

popular vijay tv celebrity about aari winning விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு

அதற்கு முக்கிய காரணமாக அவரது நேர்மையும், மன உறுதியும், சமூக அக்கறையும் ஒரு காரணம். இப்படி  எந்தவித எதிர்பார்ப்புமின்றி களமிறங்கி இன்று அனைவரையும் கவர்ந்திருக்கும் ஆரி நிச்சயம் பிக்பாஸ்  வரலாற்றில் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நேற்றைய தினம் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு விஜய் டிவி பிரபலமும், இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் ஒரு பதிவிட்டுள்ளார் அதில் "ஆரி ஒரு மாரி, ஆரி ஒரு அறுவை என்று பாடியவர்கள், ஆரி ஒரு அம்பி, ஆரி நீங்க ஒரு பேக்கு, இவனெல்லாம் ஒரு ஆளா அப்படின்னு சொன்ன எல்லாரும் எழுந்து நின்று கைதட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது ஆத்ம திருப்தியைக் கொடுத்தது. தர்மம் நின்று கொல்லும்! கொன்றது.தமிழுலகமே இன்றிரவு நிம்மதியாக உறங்கு! நேர்மை தோற்காது! நல்லதுக்கு காலம் உண்டு!" என்று கூறியுள்ளார்.

Tags : Aari

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Popular vijay tv celebrity about aari winning விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட பதிவு

People looking for online information on Aari will find this news story useful.