ஜி.வி.பிரகாஷ் - ராஜேஷ் கூட்டணியில் புதிய படம். இவங்கதான் ஹீரோயின்.!! அசத்தும் நடிகர்கள் தேர்வு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்து அசத்தலான தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஜி.வி.பிரகாஷ் - ராஜேஷ் கூட்டணியில் உருவாகும் படம் | popular vijay movie heroine pairs with gv prakash - rajesh new film

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஜி.வி.பிரகாஷ். இவர் தற்போது பிசியான நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் ஐங்கரன், ஜெயில், பேச்சிலர், அடங்காதே உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீஸூக்கு தயாராக இருக்கின்றன. 

ஜி.வி.பிரகாஷ் - ராஜேஷ் கூட்டணியில் உருவாகும் படம் | popular vijay movie heroine pairs with gv prakash - rajesh new film

இந்நிலையில் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. கடவுள் இருக்கான் குமாரு படத்தை இயக்கிய ராஜேஷ் இப்படத்தை இயக்குகிறார். இரண்டாவது முறையாக இருவரும் மீண்டும் இணைகின்றனர். 

ஜி.வி.பிரகாஷ் - ராஜேஷ் கூட்டணியில் உருவாகும் படம் | popular vijay movie heroine pairs with gv prakash - rajesh new film

இத்திரைப்படத்தில் விஜய்யின் பிகில் படத்தில் நடித்த அம்ரிதா அய்யர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான டேனியல், ரேஷ்மா மற்றும் நடிகர் ஆனந்த் ராஜ் நடிக்கின்றனர். 

சன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. முதல்கட்டமாக 11 நாட்கள் ஷுட்டிங்கை முடித்துள்ளது படக்குழு. மேலும் தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14-ஆம் தேதி நேரடியாக சன் டிவியில் இத்திரைப்படம் வெளியாகலாம் எனவும் தெரிவிக்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

ஜி.வி.பிரகாஷ் - ராஜேஷ் கூட்டணியில் உருவாகும் படம் | popular vijay movie heroine pairs with gv prakash - rajesh new film

People looking for online information on Amritha Aiyer, GV Prakash, M Rajesh will find this news story useful.