2020 ஆம் வருடத்தில் பல சினிமா நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் அடுத்தடுத்து மரணித்து வருவது ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் நடிகர் வடிவேல் பாலாஜி திடீரென மரணம் அடைந்தார். அந்த காயம் ஆறுவதற்கு முன்பாகவே அடுத்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
![Popular vijay Hit film director passes away | விஜய் பட இயக்குனர் மரணம் அடைந்தார் Popular vijay Hit film director passes away | விஜய் பட இயக்குனர் மரணம் அடைந்தார்](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/popular-vijay-hit-film-director-passes-away-new-home-mob-index.jpg)
நடிகர் விஜய்யின் 'வேட்டைக்காரன்' படத்தை இயக்கிய இயக்குனர் பாபு சிவன் தற்போது மரணம் அடைந்துள்ளார். இவர் இயக்குனர் தரணியிடன் துணை இயக்குனராக பணியாற்றி வந்தவர். இவர் மேலும் பைரவா, குருவி போன்ற படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். அண்மையில் சன் டிவியில் ஒளிபரப்பான 'ராசாத்தி' என்ற சீரியலை இயக்கி வந்தார். இந்நிலையில் உடல் நல குறைவால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.