'துணிவு' படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்.. டப்பிங் முடிச்சிட்டு பகிர்ந்த ஃபோட்டோ!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்தாக 'துணிவு' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் இணைந்துதள்ளது பற்றி அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது.

Advertising
>
Advertising

நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் H. வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோருடன் துணிவு படத்தின் மூலம் நடிகர் அஜித் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்.

இந்த திரைப்படம், 2023 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாகும் என்றும் படக்குழு சார்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அஜித்துடன் நடிகை மஞ்சு வாரியர், நடிகர் ஜான் கொக்கென், வீரா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

தொடர்ந்து, துணிவு படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவது குறித்தும் சில தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனிடையே, துணிவு படத்தின் முதல் சிங்கிள் பாடல், நவம்பர் மாதம் வெளியாகும் என்றும் மேலும் இந்த படத்தின் முதல் பாடலுக்கு கல்யாண் மாஸ்டர் தான் டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி உள்ளார் என்றும் நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் தெரிவித்திருந்தது.

பொங்கல் விருந்தாக துணிவு ரிலீஸ் ஆக உள்ளதால், அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், பிக்பாஸ் பிரபலம் ஒருவர் துணிவு படத்தில் இணைந்துள்ளது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல டிவி தொகுப்பாளினியான மமதி சாரி, தமிழில் ஒளிபரப்பாகி இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டிருந்தார். இதனையடுத்து தற்போது துணிவு படத்தில் இணைந்துள்ளது பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் H. வினோத்துடன் டப்பிங்கில் ஈடுபட்டுள்ளது பற்றிய புகைப்படத்தை பகிர்ந்த மமதி, துணிவு படத்தில் நடித்துள்ளது பற்றியும் தற்போது டப்பிங்கில் ஈடுபட்டிருந்தது பற்றியும் தனது கேப்ஷனில் குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்த திரைப்படத்தின் அனுபவம் குறித்து படக்குழுவினர் அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்த மமதி, இந்த படம் சிறப்பாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மமதி சாரியின் இன்ஸ்டா பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Popular tv anchor mamathi chari in thunivu dubbing

People looking for online information on Ajith Kumar, Boney kapoor, Ghibran, H Vinoth, Mamathi chari, Thunivu will find this news story useful.