நாடு முழுவதும் கொரொனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோர் ஒருபுறம் இருக்க, குணமாவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருவது மக்களிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல ஹிந்தி டிவி நடிகை மோகன குமாரி சிங் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தனக்கு செய்யப்படும் சிகிச்சை முறைகள் குறித்து தொடர்ச்சியாக அவர் பகிர, அது வைரலானது.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவருக்கு இன்னும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார். தனக்கும் குடும்பத்தாருக்கும் இன்னும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும், அதன் காரணமாக தனிமையில் இருப்பதாகவும் தெரிவித்தார். தற்போது உடல் நிலை சற்று மேம்பட்டிருப்பதாகவும், ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி என்றும் தெரிவித்தார்.