திரைப்பட நடிகர்கள் போலவே சின்னத்திரை நடிகர்களுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. சமீப காலமாக சின்னத்திரை நடிகர், நடிகைகளின் சமூக வலைதள பதிவுகள் வைரலாகி வருவது அதற்கு சிறந்த உதாரணம்.
அதன் ஒரு பகுதியாக ஜி தமிழில் ஒளிபரப்பாகும் 'இரட்டை ரோஜோ' தொடரில் இரட்டை வேடங்களில் நடித்து வந்தவர் ஷிவானி நாராயணன். அவர் அடிக்கடி வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சில வருடங்களுக்கு முன்பு எடுத்த ஃபோட்டோவையும், தற்போது இருக்கும் ஃபோட்டோவையும் பகிர்ந்துள்ளார். இரண்டு புகைப்படங்களும் முற்றிலும் வித்தியாசமாக இருப்பதால் அது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags : Shivani Narayanan