திரைப்படங்கள் போலவே தொலைக்காட்சி தொடர்களுக்கும் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். ரசிகர்கள் தங்கள் மனம் கவர்ந்த சீரியல் நடிகர்களுக்கு சமூக வலைதளங்களில் ஃபேன் பேஜ் தொடங்கி கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. குறிப்பாக அந்த சீரியலில் முல்லை என்ற வேடத்தில் நடிக்கும் சித்ராவிற்கும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
நடிகை சித்ராவிற்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அவர் ஹேமந்த் என்ற தொழிலதிபரை மணக்கவிருக்கிறார். இந்நிலையில் அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிலளித்தார். அப்போது நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, தான் எம்எஸ்சி சைக்காலஜி படித்திருப்பதாக கூறி தனது கல்லூரி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த ஃபோட்டோவில் அவர் அடையாளம் தெரியாமல் இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.