பிரபல சன் டிவி சீரியல் திடீர் நிறுத்தம் - வீடியோ பகிர்ந்து நடிகை உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சன் டிவி சீரியல்களுக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக சீரியல் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், சில கட்டுப்பாடுகளுடன் அரசு வழங்கிய அனுமதியின் பேரில் மீண்டும் துவங்கியது.

அதன் ஒரு பகுதியாக சன் டிவியில் ரேவதி , தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்திருந்த அழகு சீரியல் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர்கள் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகியது. அதில் நடிகை ஊர்வசியும் இடம்பெற்றிருந்ததினால் சீரியலின் கதையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த சீரியல் திடீரென நிறுத்தப்பட்டதாக அதில் நடிக்கும் நடிகர்கள் சமூக வலைதளங்களில் அறிவித்தனர். அதன் ஒரு பகுதியாக அந்த சீரியலில் காவ்யா என்ற வேடத்தில் நடிக்கும் சஹானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அந்த சீரியலில் உடன் நடிக்கும் நடிகர்களுடன் டப்மாஸ் வீடியோவை பகிர்ந்து இந்த சீரியல் முடிந்தது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

Popular tv actress sad about serial ending soon ft Sun TV Azhagu | சன் டிவி திடீர் நிறுத்தம் குறித்து நடிகை வருத்தம்

People looking for online information on Azhagu, Sahana, Sun TV will find this news story useful.