கார் விபத்தில் சிக்கிய பிரபல டிவி நடிகை - பலத்த காயம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல ஹிந்தி டிவி நடிகை ஆன்சல் குரானா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிலையில் அவருக்கு சமீபத்தில் விபத்து ஏற்பட்டு காலில் சிறு முறிவு ஏற்பட்டுள்ளதாம். இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ''நின்று கொண்டிருக்கும் என் கார் மீது ஒருவர் தனது காரால் மோதி விட்டார். உள்ளே நான் இருந்ததை கூட அவர் கவனிக்கவில்லை. இனி குறைந்தது 15 நாட்களுக்கு நடப்பது சிரமம். பரவாயில்லை. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனக்கு அழகான குடும்பம், நண்பர்கள் நீங்கள் எல்லாம் என்னை ஆதரிக்க இருப்பதனால் எனக்கு கவலையில்லை. நன்றி'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது மீது காரை ஏற்றியவரை அவர் மன்னித்து விட்டதாக தெரிவித்துள்ளார். அவரது பிறந்த நாள் நாளை(06/08/2020) கொண்டாடப்படவிருக்கும் நிலையில் அவருக்கு இந்த மாதிரி விபத்து ஏற்பட்டிருப்பது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

Popular Tv Actress meets with an accident ft Aanchal Khurana | கார் விபத்தில் சிக்கிய பிரபல டிவி நடிகை, வீடியோ வைரல்

People looking for online information on Aanchal Khurana will find this news story useful.