பிரபல டிவி நடிகை தூக்கிட்டு தற்கொலை - கடைசியாக இன்ஸ்டாகிராமில் பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் தாக்கம் மக்களை ஒரு புறம் அச்சுறுத்திக் கொண்டிருக்க, திரையுலக பிரபலங்களின் மறைவு குறித்த செய்திகள் வெளியாகி மக்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றன.

Advertising
Advertising

அதன் ஒரு பகுதியாக கிரைம் பேட்ரோல், லால் இஷ்க் உள்ளிட்ட பாலிவுட் டிவி தொடர்களில் நடித்துள்ள ப்ரெக்ஷா மேத்தா (Preksha Metha) ரசிகர்களிடையே மிகவும் பிரபலம். இவர் மத்திய பிரேதச மாநிலம் இந்தூரில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு (25/05/2020) தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவருக்கு வயது 25 ஆகிறது. அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தாருக்கு மறுநாள் காலையில் தெரியந்துவள்ளதாக கூறப்படுகிறது. அவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

அவர் தற்கொலை செய்தவற்கு முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது செல்ஃபியை பகிர்ந்து, ஹிந்தி பாடல் வரிகளை பதிவிட்டுள்ளார்.  மேலும் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வேலையில்லாத காரணத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் அவரை கவலையடைச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Popular TV Actress hangs herself in her residence | பிரபல டிவி நடிகை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம்

People looking for online information on Coronavirus lockdown, Preksha Mehta, Suicide will find this news story useful.