படப்பிடிப்பு இல்லாததால் பிரபல டிவி நடிகை அன்றாட செலவுகளுக்கு பணமில்லாமல் தவிக்கும் அவலம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த கொரோனா வைரஸ் ஊரடங்கு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது. வணிகம் சார்ந்த செயல்பாடுகளுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் இன்னும் பெரும்பாலான தொழில்கள் முன்பு போல் இயங்காதாதால் பணியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

Popular TV Actress affected in financial distress, Plea for help | டிவி நடிகை பண உதவி கேட்டு கோரிக்கை
Advertising
Advertising

குறிப்பாக சினிமா படப்பிடிப்புகள் இயங்காததால் அது சார்ந்த பணி செய்யும் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலையிழந்து, அவர்கள் அன்றாட செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் சில துணை நடிகர்கள் செலவுக்கு பணமில்லாமல் மக்களிடம் உதவி கேட்கும் துயரமும் அரங்கேறி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பிரபல ஹிந்தி டிவி நடிகை நுப்புர் அலங்கரின் (Nupur Alankar) பணம் தனியார் வங்கியில் எடுக்கமுடியாமல் மாட்டிக்கொண்டுள்ளது. அவரது அம்மாவின் மருத்துவ செலவுகளுக்கு பணம் தேவைப்படுகிறதாம். இதனையடுத்து அவரது நெருங்கிய தோழி ரேணுகா ஷஹானே தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நுப்புருக்காக மக்களிடம் பணம் கேட்டு கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது படப்பிடிப்புகள் இல்லாததால் நுப்புரின் அன்றாட செலவுகளுக்கும் பணமில்லை என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

Popular TV Actress affected in financial distress, Plea for help | டிவி நடிகை பண உதவி கேட்டு கோரிக்கை

People looking for online information on Coronavirus lockdown, Nupur Alankar, TV Actress will find this news story useful.