கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல டிவி நடிகை - மருத்துவமனையில் அனுமதி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பல்வேறு திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருவது ரசிகர்களை வேதனைக்குள்ளாக்கி வருகிறது. நாட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான அமிதாப் பச்சனின் குடும்பத்தினர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி சமீபத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் பிரபல ஹிந்தி சீரியல் நடிகை ஷ்ரேனு பரிக் (Shrenu Parikh) கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாராம். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் எனக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா இருப்பது உறுதியானது. நான் தற்போது மருத்துவமனையில் உடல்நிலை மேம்பட்டு வருகிறேன். கொரோனாவில் இருந்து மக்களை காக்கும் போராளிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Popular TV actor tests positive for coronavirus ft Shrenu Parikh | கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல டிவி நடிகை மருத்துமனையில் அனுமதி

People looking for online information on Shrenu Parikh will find this news story useful.