பிரபல டிவி சீரியல் நடிகர் மரணம்.. தற்கொலை என்ற சந்தேகத்தில் போலீஸ்.! - அதிர வைக்கும் தகவல்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல டிவி சிரியல் நடிகர் மரணம் என தெரிய வந்துள்ள செய்தி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஹிந்தியில் பிரபல டிவி சிரியல் நடிகராக வலம் வருபவர் சமீர் ஷர்மா. இவர் Yeh Rishety Hain Pyaar Ke என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மேலும் பிரபலமானார்.  மேலும் சமீர் ஷர்மா பல்வேறு சின்னத்திரை சீரியல்களில் பிசியாக நடித்து வந்தார். 

இந்நிலையில் நடிகர் சமீர் ஷர்மா தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று அவரது பிரேதத்தை மீட்ட, காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். சமீர் தனியாக தங்கியிருந்த வீட்டின் வாட்ச்மேன் தான் இதை முதலில் பார்த்து, பின்பு மற்றவர்களிடம் தெரிவித்துள்ளார். சமீர் ஷர்மாவின் உடலை பார்க்கும் பொழுது,  இரண்டு நாட்களுக்கு முன்னரே அவரின் உயிர் பிரிந்திருக்கலாம் என தெரிகிறது என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. சுஷாந்த் சிங் மரணத்தை தொடர்ந்து, மும்பையில் நிகழ்ந்துள்ள இந்த நடிகரின் தற்கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தொடர்புடைய இணைப்புகள்

பிரபல நடிகர் வீட்டில் தற்கொலை என தகவல் | Popular tv actor suicide in home shocks netizens

People looking for online information on Mumbai, Samir Sharma, Suicide, Sushant Singh Rajput will find this news story useful.