பிரபல தமிழ் சொற்பொழிவாளர், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமை பாரதி பாஸ்கர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பரபரப்பான பல சமூக விவாத மேடைகளில், சமூக பொறுப்புடனும், அனைவரும் ரசிக்கும்படியான எளிமையான மொழியிலும் பேசுபவர் பாரதி பாஸ்கர். ஒரு பத்தாண்டுகளுக்கும் மேலாக 'பட்டிமன்ற' நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் பாரதி பாஸ்கர், பண்டிகை நாட்களில் சேனல்களில் ஒளிபரப்பாகும் பல விவாத நிகழ்ச்சிகளில் பேசுவார்.
பிரபல தமிழ் அறிஞரான சாலமன் பாப்பையா மற்றும் ராஜா பேசும் பட்டிமன்றங்களில் பாரதி பாஸ்கரும் ஒரு முக்கிய அங்கமாக விளங்குபவர். பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் இவர்களது நிகழ்ச்சிகளுக்காக உலகெங்கிலும் உள்ள தமிழ் பார்வையாளர்கள் ரசிகர்களாக உள்ளனர்.
இளைஞர்கள் முதல் பெரியோர் வரை பிரபலமான பாரதி பாஸ்கர் ஒரு முன்னணி தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் தான் 52 வயதான பாரதி பாஸ்கர் இன்று (ஆகஸ்ட் 9) உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் விரைவில் நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை செய்வதாக கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதனிடையே நடிகரும் அரசியல்வாதியுமான குஷ்பு சுந்தர், “பாரதி பாஸ்கர் அறிவார்ந்த புன்னகைக்கு பெயர் பெற்றவர், அவரது தமிழ் நலமாக இருக்க, திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு தமிழ் மக்களும் எப்போதும் அவருக்காகவே ஒரு புன்னகையை வைத்திருப்பார்கள். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உலகிற்கு அவரை போன்ற அழகான ஆன்மா தேவை.” என தமது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read: பெரும் சோகம்!!! 9 முறை மூளை அறுவை சிகிச்சை செய்த பிரபல சீரியல் நடிகை திடீர் மரணம்!