போடு! திரைத்துறைக்கே பெருமை! கின்னஸ் சாதனை புரிந்த பிரபல டான்ஸ் மாஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமூக செயல்பாட்டாளர் திரு Dr.R.J.ராமநாரயணன்  AMN Fine Arts   சார்பில் கலைகளை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார். நாட்டிய கலை மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக,  டான்ஸ் மாஸ்டர் I.ராதிகா மேற்பார்வையில், நடன நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புரிந்துள்ளது.

Advertising
>
Advertising

தமிழக நாட்டிய கலைகளின் கலாச்சார மதிப்பை காக்கவும், இளைய தலைமுறையினரிடம் இக்கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும், திறமை இருந்தும் மேடை அணையாத கலைஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் பொருட்டு  AMN Fine Arts சார்பில் Dr.RJ.ராமநாரயணன் நாட்டிய நிகழ்ச்சிகளை தினமும் தொடர்ந்து நடத்தும் நிகழ்வினை டான்ஸ் மாஸ்டர் I.ராதிகாவின் மேற்பார்வையில் முன்னெடுத்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி டான்ஸ் மாஸ்டராக வலம் வரும் I.ராதிகா மற்றும் அவரது குழுவின் ஒருங்கிணைப்பில், சென்னையில் பல மேடைகளிலும் ஆன்லைனிலும் 365 நாட்கள் தினமும்  ஒரு மணி நேரம் நாட்டிய திருவிழா  நடந்தேறியது.

நாளின் எண்ணிகைக்கேற்ப நடனமாடும் நபர்கள் பங்கேற்று நடனமாடினர். பல முகமறியாத திறமை மிகு கலைஞர்கள் இதில் கலந்துகொண்டனர். 365 நாட்கள் தொடர்ந்து நடந்த இந்நிகழ்வை தொடர்ந்து நிறைவு விழாவாக நாட்டிய பெருவிழா 600 நடன நாட்டிய நபர்கள் பங்கேற்பில் நடைபெற்றது. ஆன்லைன் மூலம் கின்னஸ்   குழு கண்காணிப்பில் 600 நபர்கள் பங்கேற்க நீதிபதிகள் முன்னிலையில் ஶ்ரீ கோல விழி அம்மன் பரத பெருவிழா நடன நிகழ்வு  கின்னஸ் சாதனையாக நிகழ்ந்தது. 

பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி இக்குழுவை  பாராட்டி கின்னஸ் சாதனைக்கான சான்றிதழை வழங்கினார். டான்ஸ் மாஸ்டர் I.ராதிகா அவரது உதவியாளர்கள்  LR சக்ரவர்த்தி மற்றும் P.வெங்கடேஷ்  ஆகியோருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

தொடர்புடைய இணைப்புகள்

Popular tamil Dance master radhika guinness record trending

People looking for online information on Dance master raadhika, Guinness Record, Puducherry, Radhika dance, Tamil dance master will find this news story useful.