பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் மரணம் - சோகத்தில் திரையுலகம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த கொரோனா வைரஸ் காலக்கட்டம் திரைத்துறைக்கு பொருளாதார ரீதியாக இழப்பு ஒருபுறம் இருக்க அடுத்தடுத்து நிகழும் பிரபலங்களின் மறைவு மேலும் அவர்களுக்கு துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் திரைத்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக கே.ஆர்.கே.மூவிஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமான கே.ஆர்.கண்ணன் மரண செய்தி அமைந்துள்ளது.  கே.ஆர்.கே கண்ணன் நேற்று (01/09/2020) மாலை 5.30 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73.

அவரது தயாரிப்பில் 'மௌன யுத்தம்', 'கல்யாண காலம்', 'அவன்', 'நாணயம் இல்லாத நாணயம்', 'கலர் கனவுகள்', 'போங்கடி நீங்களும் உங்க காதலும்' போன்ற படங்கள் முக்கியமானவை. அவரது இறுதி சடங்கு இன்று(02/09/2020) மாலை முகலிவாக்கம் அருகே உள்ள மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.

Popular Tamil cinema producer KR Kannan passed away | பிரபல தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ஆர்.கண்ணன் மரணம்

People looking for online information on K.R.Kannan, KRK Movies will find this news story useful.