பிரபல தமிழ் சினிமா நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு.!!! வைரலாகும் ஃபேமிலி போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தமிழ் சினிமா நடிகைக்கு குழந்தை பிறந்துள்ளதையடுத்து, அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் அடித்து வருகிறது. 

தமிழ் சினிமாவில் நடிகையாக ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை பூஜா குமார். இவர் கமலுடன் விஸ்வரூபம், விஸ்வரூபம்-2, உத்தம வில்லன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் பாலிவுட்டிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் நடிகை பூஜா குமாருக்கு குழந்தை பிறந்துள்ளது குறித்து அவரது கணவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். தங்களுக்கு பிறந்துள்ள குழந்தைக்கு நவ்யா ஜோஷி என பெயரிட்டுள்ளனர் இவர்கள். 

மேலும் குழந்தையின் ரீசன்ட் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் பூஜா குமாருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருவதுடன், இந்த புகைப்படங்கள் வைரல் அடித்து வருகிறது. 

 

நடிகை பூஜா குமாருக்கு குழந்தை பிறந்தது | popular tamil cinema actress blessed with baby

People looking for online information on Pooja Kumar will find this news story useful.