உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். மேலும் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி நாடு மக்களுக்கு ஒரு கோரிக்கை விடுத்தார். நமது ஒற்றுமையை காட்டும் வகையில் 9 ஆம் தேதி, வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்து, விளக்குகள் அல்லது தீபங்களை ஏற்றி 9 நிமிடங்களுக்கு ஒளிர செய்யும் படி கூறினார். இதனையடுத்து பொதுமக்களும், பிரபலங்களும் விளக்குகளுடன் தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
ஆனால் சிலர் அந்த கோரிக்கையின் சாராம்சம்சத்தை புரிந்து கொள்ளாமல் கூட்டம் கூட்டமாக கையில் எரிபந்தங்களுடன் உலா வந்தனர். சிலர் பட்டாசுகளை வெடித்தனர். இது போன்ற சில விஷயங்கள் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. அதிலும் ஒருவர் இன்னும் ஒரு படி மேலே போய், உடலில் மின் விளக்குகள் பொருத்திக் கொண்டு 'கோ கொரோனா' என்று கோஷமிட்டப்படியே உலா வந்தார். அந்த வீடியோவை பதிவிட்ட நடிகர் விஷ்ணு விஷால், அமிதாப் பச்சன் நடித்த பிரபல ஹிந்தி பாடல் ஒன்றின் மூலம் அதற்கு வேடிக்கையாக பதிலளித்து உள்ளார்.
அதாவது " இந்த முழு உலகமே அழகில் தான் பிரயப்படுகிறது. பின்பு நான் மட்டும் அழகில் மயங்குவதில் என்ன தவறு" என்று பொருள்படும் ஹிந்தி பாடல் வரிகளை வேடிக்கையாக தலைப்பிட்டு உள்ளார்