"நீ போய்ட்டியா.. மனம் நம்ப மறுக்குது புனீத்".. பிரபல நடிகரின் உருக்கமான தமிழ் கடிதம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல கன்னட சூப்பர்ஸ்டார் புனித் ராஜ்குமார் உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

popular tamil actor emotional condolence Puneeth Rajkumar demise
Advertising
>
Advertising

கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், சிவ ராஜ்குமாரின் தம்பியுமானவர் புனித் ராஜ்குமார் கன்னட திரைப்பட உலகின் முன்னணி நடிகராவார். இவருக்கு வயது 46. இவருக்கு அஸ்வினி என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

popular tamil actor emotional condolence Puneeth Rajkumar demise

1985 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தேசிய விருதை வென்ற புனித் ராஜ்குமார், 4 முறை கர்நாடக மாநில விருதையும், 5 முறை தென்னிந்திய பிலிம்பேர் விருதையும் பெற்றவர். கடைசியாக யுவரத்னா படத்தில் காணப்பட்ட புனித், ஜேம்ஸ் என்ற ஆக்ஷன் படத்தில் தற்போது நடித்து வந்தார்.

பஜரங்கி-2 பட விழாவில் கலந்து கொண்ட புனித் ராஜ்குமார் இன்று இந்த படத்தை பிரீமியர் ஷோவாக பார்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு புனித் ராஜ்குமார், பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைப் பலனின்றி திடீர் மாரடைப்பால் இவர் உயிரிழந்துள்ளார். 

இவருடைய மறைவுக்கு பலதரப்பட்ட திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல்களை தெரிவித்து, கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அனைத்து நடிகர் நடிகைகள் சமூகம் சார்பில் நடிகர் நாசர் தமது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

அதில், “புனீத்... என் மனதும் அறிவும் நம்ப மறுக்கிறது... உன் முகத்தில் எக்கணமும் நிலைத்து நிற்கும் அகன்ற சிரிப்பு எப்படி உறைந்து போனது.. நான் உணர மறுக்கிறேன் நீ எமைவிட்டு போனாய் என்று.. புனீத்.... புனீத்....புனீத்” என்று அவர் உருக்கமாக எழுதியுள்ளார்.

Popular tamil actor emotional condolence Puneeth Rajkumar demise

People looking for online information on Nasser, Puneeth rajkumar, PuneethRajkumar, Punith rajkumar, PunithRajkumar, RIP Puneeth Rajkumar, RIPPuneethRajkumar, RIPPunithRajkumar will find this news story useful.