உலகம் முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க கடந்த 5 மாதங்களாக கடுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. எனினும் பலரது உயிர்கள் பறிக்கப்பட்டு நாளுக்கு நாள் துக்க செய்திகள் அதிகரித்து வருகிறது. அது மட்டுமல்லாது உலகம் முழுதும் இருக்கும் கலைஞர்கள் அடுத்தடுத்து மரணித்து வருவதும் 2020-ம் ஆண்டின் சூழ்ச்சியாக உள்ளது. நடிகர் சுஷாந்தின் மரணத்தை அடுத்து மீண்டும் ஒரு துக்க செய்தி வெளியாகியுள்ளது.
இந்நிலையில் புகழ் பெற்ற நடிகரான ஆசீப் பஸ்ரா தர்மசாலாவில் உள்ள இல்லத்தில் தூக்கிட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். இவர் நடிகர் சூர்யா, வித்யூத் ஜமால் நடித்த 'அஞ்சான்' படத்தில் நடித்திருந்தார். இவருக்கு வயது 53. அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் உண்மையான காரணம் என்ன என்று போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் பல பிரபலங்களும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.