புது மாப்பிள்ளையாகும் பிரபல பின்னணி பாடகர்..! - ஜோடிகளின் போட்டோ.. குவியும் வாழ்த்துக்கள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பின்னணி பாடகருக்கு திருமணம் நிச்சயமானதையடுத்து, இணையத்தில் வாழ்த்துக்கள் குவித்து வருகிறது. 

சூப்பர் சிங்கர் போட்டியில் ஜீனியர் பிரிவில் கலந்து கொண்டு அசத்தியவர் சாய் சரண். இதையடுத்து இவர் சூப்பர் சிங்கர் சீனியர் போட்டியிலும் கலந்து கொண்டு டைட்டில் வின்னராக பிரபலமானார். மேலும் மனம் கொத்தி பறவை, சாட்டை, மருது உள்ளிட்ட படங்களிலும் இவரது பாடகள் சூப்பர் ஹிட் அடித்தன. 

இந்நிலையில் தற்போது பாடகர் சாய் சரண் தனக்கு திருமணம் நிச்சயமாகியிருக்கும் தகவலை தெரிவித்துள்ளார். தனது வருங்கால மணைவியுடன் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ள அவர், ''Engaged'' என சுருக்கமாக இந்த மகிழ்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து பின்னணி பாடகர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

 

பிரபல பின்னணி பாடகருக்கு திருமணம் நிச்சயம் | Popular super singer fame sai sharan engagement pics goes viral

People looking for online information on Sai Sharan, Super Singer Sai Sharan will find this news story useful.