பிரபல சீரியல் நடிகருக்கு திருமணம் முடிந்தது... வெளியான அழகிய புகைப்படங்கள்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளதை அடுத்து பல பிரபலங்களும் தங்களது திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். இது திருமணம் சீசனா என்று சொல்லக்கூடிய அளவுக்கு அடுத்தடுத்த பல பிரபலங்களும் தங்கள் திருமணத்தை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி மற்றும் கண்ணான கண்ணே போன்ற சீரியல்களில் நடித்த நடிகர் ராகுலுக்கு ரவி, மாடலிங் துறையைச் சேர்ந்த லக்‌ஷ்மி நாயர் என்பவரை திருமணம் செய்துள்ளார். மணமக்களின் அழகிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

முன்பே தனது வருங்கால மனைவியுடன் அழகான புகைப்படத்தை வெளியிட்ட அவர்  திருமணம் பற்றி கூறும்போது "அவளை முதன்முதலில் சந்தித்த போது இதுவும் ஒரு சாதாரண நாள் தான் என்று நினைத்தேன். பின்பு ஒவ்வொரு நாளும் அவளால் மெருகேறிக் கொண்டே வந்தது. இன்று எனக்கு ஸ்பெஷலான பெண்மணியாக மாறியிருக்கிறார். எனது நாட்களை மட்டுமல்ல எனது வாழ்க்கையும் அவளால் மெருகேறி உள்ளது" என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த அழகிய ஜோடி தற்போது திருமணம் முடித்துள்ளனர். அவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : Rahul Ravi

Popular Sun tv actor gets married சீரியல் நடிகருக்கு திருமணம் முடிந்தது

People looking for online information on Rahul Ravi will find this news story useful.