மேக்னா ராஜ்-க்கு குழந்தை பிறந்தவுடன்., நேரில் வந்து பார்த்த அந்த நட்சத்திர ஜோடி.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மேக்னா ராஜுக்கு குழந்தை பிறந்ததையடுத்து, பிரபல நடிகர் - நடிகை ஜோடி அவரை நேரில் வந்து சந்தித்துள்ளனர். 

தமிழில் காதல் சொல்ல வந்தேன் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் மேக்னா ராஜ். இவர் மலையாளத்திலும் சில படங்களில் நடித்தார். இவர் கன்னட சினிமா நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவை திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவி கடந்த ஜூன் மாதம் மாரடைப்பால் காலமானார். 

இந்நிலையில் கடந்த 22-ஆம் தேதி மேக்னா ராஜுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதை சிரஞ்சீவியின் மறுபிறப்பு என சொல்லி மகிழ்ந்தனர் குடும்பத்தினர். இந்நிலையில் குழந்தை பிறந்துள்ள செய்தியறிந்த ஃபஹத் ஃபாசில் மற்றும் நஸ்ரியா ஜோடி, அவரை நேரில் சென்று சந்தித்துள்ளனர். 

அண்மையில் அவர்கள் வாங்கிய புதிய போர்ஷே காரில் மருத்துவமனைக்கு சென்று தாயையும் சேயையும் நலம் விசாரித்து வந்துள்ளது இந்த ஸ்டார் ஜோடி. இதையடுத்து இணையத்தில் வெளியான இவர்களின் போட்டோக்களும் வீடியோக்களும் வைரல் அடித்து வருகிறது. மேக்னா ராஜ் மற்றும் நஸ்ரியா நீண்ட நாட்களாகவே நட்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 

மேக்னா ராஜை சந்தித்த ஜோடிகள் | Popular star couples visits meghna raj and new born baby in hospital

People looking for online information on Fahad Fazil, Meghna, Meghna Raj Chiranjeevi Sarja, Nazriya nazim will find this news story useful.