கொரோனா பாதிப்புக்குள்ளான பிரபல பாடகி - ''ஒரு ஷூட்டிங்கில் கலந்து கொண்ட போது ....''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாடகி சுனிதாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் பரவியது. இந்த தகவல்கள் அவரது ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் நீண்ட நாட்களுக்கு பிறகு இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ பகிர்ந்துள்ளார்.

அதில், எனக்கு நண்பர்கள், மீடியா மற்றும் ரசிகர்களிடமிருந்து ஃபோன் கால் மற்றும் ஏராளமான மெசேஜ் வந்தது. உங்கள் அக்கறைக்கு நன்றி. ஆம் எனக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நான் சில நாட்களுக்கு முன் ஷூட்டிங் ஒன்றில் கலந்து கொண்டபோது எனக்கு தலைவலி ஏற்பட்டது. அதனை நான் உதாசினப்படுத்தவில்லை. உடனடியாக டெஸ்ட் எடுத்துக்கொண்டேன். எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

உடனடியாக மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டேன். முறையான மருந்துகளை எடுத்துக்கொண்டேன்.  இப்போது நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்றார். மேலும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நலம் பெற பிராத்திப்பதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Popular singer tested positive for Covid 19 ft Sunitha | கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல பாடகி வீடியோ பகிர்ந்து உருக்கம்

People looking for online information on Coronavirus, Sunitha will find this news story useful.